Wednesday, March 31, 2010

சாப்பாடு இல்லாட்டி பரவா இல்லை, செந்தமிழ் மாநாடு இருக்கு ...

East OR west Tamilnadu is ...........?

வாழ்க தமிழ் : நம்மா அரசின் சாதனை இதே

கடந்த 2008-09ம் ஆண்டு கணக்கீட்டின்படி, தென்மாநிலங்களிலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் ஆகியுள்ளது. மேலும், தொழில் துறையில் ஒரே 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில்,என்ன வளர்ச்சி

அனைத்து மாநிலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக் கீட்டை மத்திய திட்டக்கமிஷன் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் நிதியை மாநில அரசுகள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளன; எந்தெந்த துறைகளில் என்னென்ன மாதிரியான வளர்ச்சியை இந்த நிதியின் மூலம் எட்டியுள்ளன என்பது குறித்தெல்லாம் மத்திய திட்டக்கமிஷன் ஆராய்வது வழக்கம்.கடந்த 2009-10ம் ஆண்டில் தமிழகத்துக்கு 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த நிதி முழுவதும் அதாவது 100 சதவீதம் வரை தமிழக அரசால் செலவிடப் பட்டுள்ளது. இதில், அதிக பட்சமாக மின்சாரத் துறைக்கு 2 ஆயிரத்து 751 கோடியும், போக்குவரத்துத் துறைக்கு 2 ஆயிரத்து 91 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு 8 ஆயிரத்து 70 கோடி ரூபாய் செலவிடப் பட்டது.கல்வித் துறைக்கு திட்டமிடப் பட்ட செலவு 936.81 கோடி; ஆனால், செலவிடப்பட்டதோ 837.11 கோடி ரூபாய் மட்டுமே என்றும் தெரிய வந்துள்ளது. கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்ததை விட ஏன் குறைவாக செலவிடப்பட்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை.

பொருளதார வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழகம் வெறும் 4.6 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது. கேரளா 7 சதவீதமும், ஆந்திரா 5.5 சதவீதமும், கர்நாடகா 5.1 சதவீதமும் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில் தென்மாநிலங்களிலேயே தமிழகம் தான் கடைசியில் உள்ளது.கடந்த நிதியாண்டில் இந்திய அளவில் விவசாயத்துறை தான் கேட்பாரற்று கிடக்கிறது என்றால் தமிழகத்திலும் அதே நிலை தான். விவசாயத் துறையில் வளர்ச்சி மைனஸ் 1.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. தொழில் வளர்ச்சியில் கடந்த 2006-07ம் ஆண்டில் 9.4 சதவீதம் வரை தமிழகம் இருந்தது. ஆனால், 2008-09ம் ஆண்டில் வெறும் 1 சதவீதம் மட்டுமே தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சேவைத் துறையில் கடந்த 2008-09ம் ஆண்டுகளில் 8.2 சதவீதம் வரை இருந்த வளர்ச்சி தற்போது குறைந்து 7.6 ஆக ஆகிவிட்டது. கடந்த ஆண்டு ஆய்வின்படி, தனிநபர் வருமானத்தைப் பொறுத்தமட்டில் தென்மாநிலங்களில் கேரளா 49 ஆயிரத்து 310, தமிழகம் 45 ஆயிரத்து 58, கர்நாடகா 40 ஆயிரத்து 998, ஆந்திரா 39 ஆயிரத்து 590 ரூபாய் என உள்ளதாக தெரிய வந்துள்ளது.


  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗