பெங்களூரு: பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த தொடரின் 18 வது லீக் போட்டியில், கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. "டாஸ்' ஜெயித்த சென்னை அணி பீல்டிங் தேர்வு செய்தது. பவுலிங் மிரட்டல்: காலிஸ், மனீஷ் பாண்டே பெங்களூரு அணிக்கு துவக்கம் தந்தனர். சென்னை அணி கட்டுக் கோப்பாக பந்து வீச, ரன் சேர்க்க திணறியது பெங்களூரு. ஐ.பி.எல்., தொடரில் அசத்தி வரும் காலிஸ், நேற்றைய போட்டியில் ஏமாற்றினார். இவர் (19 ரன்) பாலாஜி வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த டிராவிட் (14), முரளி சுழலில் அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய முரளி, பாண்டே (20) விக்கெட்டையும் கைப்பற்றினார். மிடில் ஆர்டரில் கோஹ்லி (24) ஆறுதல் அளித்தார். உத்தப்பா அதிரடி: பின்னர் களமிறங்கிய உத்தப்பா, அதிரடியில் மிரட்டினார். முதல் 17 ஓவர் வரை, பந்து வீச்சில் அசத்திய சென்னை அணி, கடைசி 3 ஓவரில் சொதப்பியது. 18 வது ஓவரை வீசிய அஸ்வின், 11 ரன்களை விட்டுக் கொடுத்தார். பாலாஜி வீசிய 19 வது ஓவரில் உத்தப்பா "ஹாட்ரிக் சிக்சர்' விளாச, 24 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 17 ரன்கள் உட்பட, கடைசி 3 ஓவரில் மட்டும் பெங்களூரு 52 ரன்களை குவித்தது. 6 சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசிய உத்தப்பா 68 ரன்கள் குவிக்க, 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ஹைடன் "அவுட்': சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. வெறும் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார் பார்த்திவ் படேல். அடுத்து வந்த பெய்லி, ஒரு நாள் போட்டியை போல பந்துகளை வீணாக்கி வெறுப்பேற்றினார். இவர், 18 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் ஹைடன் (32), துரதிருஷ்டவசமாக ரன்- அவுட்டாக சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. மிடில் ஆர்டரில் கேப்டன் ரெய்னா (9), முரளிவிஜய் (3) அடுத்தடுத்து அவுட்டாகி பெரும் ஏமாற்றம் அளித்தனர். பத்ரி ஆறுதல்: அடுத்து வந்த பத்ரிநாத், 31 ரன்கள் (5 பவுண்டரி ஒரு சிக்சர்) சேர்த்து ஆறுதல் அளித்தார். பின்னர் களமிறங்கிய ஆல்பி மார்கல் (19), அஸ்வின் (11*) ரன் சேர்க்க திணற, 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பெங்களூரு தரப்பில் வினய் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை பெங்களூரு வீரர் உத்தப்பா கைப்பற்றினார். ஐ.பி.எல்., தொடரில் தனது முதல் போட்டியில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி (எதிர்-கோல்கட்டா) அடுத்தடுத்து 4 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ------------ முதல் முறை... பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் பாண்டே (கே) ரெய்னா (ப) முரளிதரன் 20 (28) மார்கல் 4-0-28-1, தியாகி 4-0-19-0, பாலாஜி 4-0-49-1, முரளிதரன் 4-0-25-3, அஸ்வின் 4-0-40-0. சென்னை சூப்பர் கிங்ஸ் பார்த்திவ் (கே) பவுச்சர் (ப) பிரவீண் 1 (3) பிரவீண் 4-0-21-1, ஸ்டைன் 4-0-25-0, கும்ளே 4-0-15-1, காலிஸ் 4-0-29-0, வினய் குமார் 4-0-40-4.
நேற்றைய போட்டியில் சென்னை பவுலர், பாலாஜியின் வேகத்தில், கிளீன் போல்டானார் பெங்களூரு அணி வீரர் காலிஸ் (19 ரன்). மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் காலிஸ், நேற்று தான் (5 வது போட்டி) அவுட்டானார். இதற்கு முன் விளையாடிய 4 போட்டிகளிலும்(65, 89, 44 மற்றும் 66) காலிஸ் "நாட்-அவுட்' நாயகனாகவே வலம் வந்தார்.
---------
பீல்டிங் சொதப்பல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று பீல்டிங்கில் சொதப்பியது. உத்தப்பா 5 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வினும், 25 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய்யும் "கேட்ச்' வாய்ப்பை கோட்டை விட்டனர். இதனை பயன்படுத்திக் கொண்ட உத்தப்பா 68 ரன்களை குவித்தார்.
--------
அவர் வருவர ?.......
காயம் காரணமாக கேப்டன் தோனி, இல்லாத நிலையில் வெற்றி பெற திணறி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது. பீல்டிங்கிலும் வீரர்கள் சொதப்பி வருகின்றனர். தோனி வந்தால் மட்டுமே, தோல்வியின் பிடியிலிருந்து அணியை மீட்க முடியும். நாளை மும்பை அணிக்கு எதிரான போட்டியில், தோனி களமிறங்குவாரா என எதிர்நோக்கியிருக்கிறது சென்னை அணி.
--------
ஸ்கோர் போர்டு
காலிஸ் (ப) பாலாஜி 19 (17)
டிராவிட் (ப) முரளிதரன் 14 (11)
உத்தப்பா --அவுட் இல்லை- 68 (38)
கோஹ்லி (ஸ்டெ) பார்த்திவ் (ப) முரளிதரன் 24 (16)
மார்கன் (ப) மார்கல் 1 (4)
பவுச்சர் -அவுட் இல்லை- 11 (7)
உதிரிகள் 14
மொத்தம் (20 ஓவரில் 5 விக்., இழப்பு) 171
விக்கெட் வீழ்ச்சி: 1-28 (காலிஸ்), 2-59 (டிராவிட்), 3-63 (பாண்டே), 4-110 (கோஹ்லி), 5-119 (மார்கன்).
பந்து வீச்சு:
ஹைடன் -ரன் அவுட் (டிராவிட்) 32 (28)
பெய்லி (கே) பவுச்சர் (ப) வினய் 18 (27)
ரெய்னா (கே) காலிஸ் (ப) வினய் 9 (7)
விஜய் (கே) மார்கன் (ப) கும்ளே 3 (7)
பத்ரிநாத் (கே) சப்-அப்பன்னா (ப) வினய் 31 (17)
மார்கல் (ப) வினய் 19 (19)
அஸ்வின் -அவுட் இல்லை- 11 (10)
பாலாஜி -அவுட் இல்லை- 0 (2)
உதிரிகள் 11
மொத்தம் (20 ஓவரில் 7 விக்., இழப்பு) 135
விக்கெட் வீழ்ச்சி: 1-2 (பார்த்திவ்), 2-57 (ஹைடன்), 3-59 (பெய்லி), 4-71 (ரெய்னா), 5-74 (விஜய்), 6-107 (பத்ரிநாத்), 7-135 (மார்கல்).
பந்து வீச்சு:
Tuesday, March 23, 2010
தொடரும் ராயலின் ராஜ நடை IPL CRICKET
நித்தமும் உன் முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗
-
மிக்க நலமுடைய நல் மரங்கள் பிறக்கும் மக்கள் குணம் தெரியாது ஆனால் மரங்களின் குணம் தெரியும் மரம் போல மனிதனை பெறுவதற்கு மனிதனை போல மர...
-
ஜல்லிக்கட்டு வரலாறு ஏறுதழுவுதல் பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் என் இனத்தின் அடையாளம். ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல...
-
அஞ்ச வேண்டாம் , அஞ்ச வேண்டாம் ! அகங்காரம் , போட்டி, பொறாமை ஆகியவற்றை விடவேண்டும் . பூமியை போல் எதையும் பொறுத்துக்கொள்ளவேண்டும் . இதை சாதித...