Tuesday, March 23, 2010

ஏன் இந்த அவலம் என் நாட்டில் My India


புதுடில்லி : குடும்ப பெண் குஷ்பு புதுடில்லி : 'திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் விரும்பும் பட்ச்சத்தில் இணைந்து வசிப்பதோ எந்தவிதத்திலும் தவறு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக சினிமா நடிகை குஷ்பு, 2005ல் பத்திரிகை ஓன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் வகையில் குஷ்பு தனது கருத்தை தெரிவித்ததாகக் கூறி அவர் மீது தமிழக கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் குஷ்பு மனு தாக்கல் செய்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா மற்றும் சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும்? ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தனது தனிப்பட்ட சொந்த கருத்துக்கள். எந்தவகையில் அது கலாசாரத்தை சீரழிப்பதாக கருதமுடியும்? எத்தனை வீடுகள் இந்த பேட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன? இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗