Monday, May 17, 2010

உள்ளேன் ஐயா


பட்ஜெட் கூட்டத் தொடர், மொத்தம் 32 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் அத்வானி 32 நாட்களும் சபைக்கு வந்துள்‌ளார். ராகுல் 24 நாட்களும் சோனியா 20 நாட்களும் மாஜி நடிகைகளான ஜெயா பச்சன், விஜயசாந்தி, ஜெயபிரதா ஆகியோர் ஒன்று முதல் 4 நாள் மட்டும் வந்துள்ளனர். சோனியா, ராகுல் மற்றும் மாஜி நடிகைகள் எந்த விவாதத்திலும் பங்கேற்றுப் பேசவில்லை. கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாகி இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, ஒரு நாள் கூட சபைக்கு வரவில்லை.

அத்வானி நெம்பர் 1


எங்கே நம்ம தலைவர்கள் ?


பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. கடந்த பிப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை முதல் கட்டமாகவும், ஏப்ரல் 15 முதல் மே 17 வரை இரண்டாம் கட்டமாகவும் அவை நடந்தன. மொத்தம் 32 நாட்கள் மட்டுமே, லோக்சபாவும், ராஜ்யசபாவும் இயங்கின.பார்லிமென்ட் கூட்டத் தொடர் ஆண்டு ஒன்றுக்கு, குறைந்தது 100 நாட்களாவது நடக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.ஆனால், பட்ஜெட் கூட்டத் தொடரே, 32 நாட்கள் தான் நடந்துள்ளது.இனி, மழைக்கால கூட்டத் தொடர், 10 அல்லது 15 நாட்கள் மட்டுமே நடக்க வாய்ப்புள்ளது.அதே போல, குளிர்கால கூட்டத் தொடரும் 10 அல்லது 15 நாட்கள் மட்டுமே நடப்பது வழக்கம்.


காங்கிரஸ் எம்.பி.,க்கள் எல்லாரும் பார்லிமென்ட்டுக்கு தவறாமல் பங்கேற்க வேண்டுமென அக்கட்சியின் தலைவர் சோனியா வலியுறுத்தியிருந்தார். தனது கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் தவறாமல் பார்லிமென்ட்டுக்கு வர வேண்டுமென வலியுறுத் திய காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ராகுலும்‌ சபையில் கேள்வி கேட்பதோ அல்லது முக்கிய விவாதங்களில் பங்கேற்றோ பேசவில்லை.


எதிர்க்கட்சித் தலைவர்களைப் பொறுத்தவரை, முக்கிய தலைவர்கள் எல்லாரும், 90 முதல் 100 சதவீத வருகையை பதிவு செய்துள்ளனர். அத்வானி, சபை நடந்த 32 நாட்களுமே வந்துள்ளார். ஜஸ்வந்த்சிங், தேவகவுடா போன்றவர்கள், சொற்ப நாட்களே சபைக்கு வந்தனர்.சந்திரசேகர ராவ் ஒரே ஒரு நாள் மட்டுமே வந்துள்ளார். அமர்சிங், அருண்ஷோரி போன்றவர்களும் சொற்பநாட்கள் மட்டுமே ராஜ்யசபாவுக்கு வந்துள்ளனர்.




லோக்சபா


பிரபலங்கள் வந்திருந்த நாட்கள்


அத்வானி- 32
யஷ்வந்த்சின்கா- 31
பாசுதேவ்ஆச்சார்யா- 31
மிலின்தியோரா- 31
சுப்ரியாசுலே- 30
முலாயம் சிங்- 30
குருதாஸ் தாஸ்குப்தா- 30
ஜோஷி- 29
லாலுபிரசாத்- 29
முண்டே- 28
நவீன்ஜிண்டால்- 28
மேனகா- 27
வருண்காந்தி- 27
சரத்யாதவ்- 27
ராஜ்பாப்பர்- 27
ஜெகன்மோகன்ரெட்டி- 26
சத்ருகன்சின்கா- 25
அசாருதீன்- 25
ராஜ்நாத்சிங்- 24
ராகுல்- 24
பிரியாதத்- 22
அகிலேஷ்யாதவ்- 22
தேவகவுடா- 20
சோனியா- 20
சசி தரூர்- 15
பஜன்லால்- 14
ஜஸ்வந்த்சிங்- 12
அஜித்சிங்- 10
சித்து - 7
கல்யாண்சிங்- 6
ஜெயப்ரதா- 4
அகதாசங்மா- 2
சிபுசோரன்- 2
சந்திரசேகர ராவ்- 1
விஜயசாந்தி- 1

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗