பாட்டியாலா: பஞ்சாபில் பிச்சைக்காரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (ஐ.டி., கார்டு) வழங்க, அம்மாநில அரசு முடிவு எடுத்து உள்ளது.. இதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் காணப்படும் பிச்சைக்காரர்களை புகைப்படம் எடுக்குமாறு, அந்தந்த பகுதி மூத்த அதிகாரிகளுக்கு புலனாய்வுத் துறை ஏ.டி.ஜி.பி., உத்தரவிட் டுள்ளார். பிச்சைக்காரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதால், மாநிலத்தில் நடைபெறும் சில கொடிய செயல்கள் தடுக்கப்படும் என, அரசு தெரிவிக்கிறது.
இதுகுறித்து, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநிலத்தில் குழந்தைகள் காணாமல் போவது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்தே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கடத்தலில் பல்வேறு கும்பல்கள் ஈடுபட்டுள்ளன. குழந்தைகளை கடத்தி, அவர்களை உடல் ஊனமுற்றவர்களாக்கி, அவர்களை ரோட்டோரத்தில் பிச்சையெடுக்க வைக் கின்றனர். இவ்வாறான வழக்குகள், பஞ்சாப், இமாச் சல பிரதேசம், அரியானா மற்றும் டில்லி ஆகிய பல பகுதிகளில் இருந் தும் வருகின்றன. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க உள்ள மாநில அரசின் தற்போதைய திட்டம் மூலம் பிச்சைக் காரர்களை எப்போதும் கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.