Tuesday, January 4, 2011
Monday, January 3, 2011
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !
அனைத்து செயல்களிலும்
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி,
வேண்டி னேனுக் கருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
சாகு மானுட மாயினும் அஃதைப்
படுத்து மாய்பபள் அரட்பெருங் காளி,
பாரில் வெற்ற எனக்குறு மாறே.
எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,
கண்ணு மாயிரு ரும்மென நின்றாள்
காளத் தாயிங் கெனக்கருள் செய்தாள்;
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
வெல்க காளி பதங்களென் பார்க்கே.
Monday, May 17, 2010
உள்ளேன் ஐயா

பட்ஜெட் கூட்டத் தொடர், மொத்தம் 32 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் அத்வானி 32 நாட்களும் சபைக்கு வந்துள்ளார். ராகுல் 24 நாட்களும் சோனியா 20 நாட்களும் மாஜி நடிகைகளான ஜெயா பச்சன், விஜயசாந்தி, ஜெயபிரதா ஆகியோர் ஒன்று முதல் 4 நாள் மட்டும் வந்துள்ளனர். சோனியா, ராகுல் மற்றும் மாஜி நடிகைகள் எந்த விவாதத்திலும் பங்கேற்றுப் பேசவில்லை. கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாகி இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, ஒரு நாள் கூட சபைக்கு வரவில்லை.
எங்கே நம்ம தலைவர்கள் ?
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. கடந்த பிப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை முதல் கட்டமாகவும், ஏப்ரல் 15 முதல் மே 17 வரை இரண்டாம் கட்டமாகவும் அவை நடந்தன. மொத்தம் 32 நாட்கள் மட்டுமே, லோக்சபாவும், ராஜ்யசபாவும் இயங்கின.பார்லிமென்ட் கூட்டத் தொடர் ஆண்டு ஒன்றுக்கு, குறைந்தது 100 நாட்களாவது நடக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.ஆனால், பட்ஜெட் கூட்டத் தொடரே, 32 நாட்கள் தான் நடந்துள்ளது.இனி, மழைக்கால கூட்டத் தொடர், 10 அல்லது 15 நாட்கள் மட்டுமே நடக்க வாய்ப்புள்ளது.அதே போல, குளிர்கால கூட்டத் தொடரும் 10 அல்லது 15 நாட்கள் மட்டுமே நடப்பது வழக்கம்.
காங்கிரஸ் எம்.பி.,க்கள் எல்லாரும் பார்லிமென்ட்டுக்கு தவறாமல் பங்கேற்க வேண்டுமென அக்கட்சியின் தலைவர் சோனியா வலியுறுத்தியிருந்தார். தனது கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் தவறாமல் பார்லிமென்ட்டுக்கு வர வேண்டுமென வலியுறுத் திய காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ராகுலும் சபையில் கேள்வி கேட்பதோ அல்லது முக்கிய விவாதங்களில் பங்கேற்றோ பேசவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர்களைப் பொறுத்தவரை, முக்கிய தலைவர்கள் எல்லாரும், 90 முதல் 100 சதவீத வருகையை பதிவு செய்துள்ளனர். அத்வானி, சபை நடந்த 32 நாட்களுமே வந்துள்ளார். ஜஸ்வந்த்சிங், தேவகவுடா போன்றவர்கள், சொற்ப நாட்களே சபைக்கு வந்தனர்.சந்திரசேகர ராவ் ஒரே ஒரு நாள் மட்டுமே வந்துள்ளார். அமர்சிங், அருண்ஷோரி போன்றவர்களும் சொற்பநாட்கள் மட்டுமே ராஜ்யசபாவுக்கு வந்துள்ளனர்.
லோக்சபா
பிரபலங்கள் வந்திருந்த நாட்கள்
அத்வானி- 32
யஷ்வந்த்சின்கா- 31
பாசுதேவ்ஆச்சார்யா- 31
மிலின்தியோரா- 31
சுப்ரியாசுலே- 30
முலாயம் சிங்- 30
குருதாஸ் தாஸ்குப்தா- 30
ஜோஷி- 29
லாலுபிரசாத்- 29
முண்டே- 28
நவீன்ஜிண்டால்- 28
மேனகா- 27
வருண்காந்தி- 27
சரத்யாதவ்- 27
ராஜ்பாப்பர்- 27
ஜெகன்மோகன்ரெட்டி- 26
சத்ருகன்சின்கா- 25
அசாருதீன்- 25
ராஜ்நாத்சிங்- 24
ராகுல்- 24
பிரியாதத்- 22
அகிலேஷ்யாதவ்- 22
தேவகவுடா- 20
சோனியா- 20
சசி தரூர்- 15
பஜன்லால்- 14
ஜஸ்வந்த்சிங்- 12
அஜித்சிங்- 10
சித்து - 7
கல்யாண்சிங்- 6
ஜெயப்ரதா- 4
அகதாசங்மா- 2
சிபுசோரன்- 2
சந்திரசேகர ராவ்- 1
விஜயசாந்தி- 1
Friday, April 16, 2010
கவி
Wednesday, April 7, 2010
அழகு (My Sweety)
Thursday, April 1, 2010
அழகு குறிப்பு

பாதாம் பருப்பு , பிஸ்தா பருப்பு இரண்டையும் ஊற வைத்து , அதன் உடன் வெள்ளரி விதை , ஓட்ஸ் மாவு சந்தனம் , படிகாரம் போன்றவை கலந்து பூசி வர , முகம் பளிச் என்று ஜொலிக்கும் ,,
வில்வ இலை மிக சிறந்த அழகு தரும் மூலிகை ஆகும் . வில்வ இலையை பறித்து மைய அரைத்து முகத்தில் பூசி வர , அனைத்து சரும நோய்களும் குணமாகும் ,...........
Wednesday, March 31, 2010
சாப்பாடு இல்லாட்டி பரவா இல்லை, செந்தமிழ் மாநாடு இருக்கு ...
வாழ்க தமிழ் : நம்மா அரசின் சாதனை இதே
கடந்த 2008-09ம் ஆண்டு கணக்கீட்டின்படி, தென்மாநிலங்களிலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் ஆகியுள்ளது. மேலும், தொழில் துறையில் ஒரே 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில்,என்ன வளர்ச்சி
அனைத்து மாநிலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக் கீட்டை மத்திய திட்டக்கமிஷன் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் நிதியை மாநில அரசுகள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளன; எந்தெந்த துறைகளில் என்னென்ன மாதிரியான வளர்ச்சியை இந்த நிதியின் மூலம் எட்டியுள்ளன என்பது குறித்தெல்லாம் மத்திய திட்டக்கமிஷன் ஆராய்வது வழக்கம்.கடந்த 2009-10ம் ஆண்டில் தமிழகத்துக்கு 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த நிதி முழுவதும் அதாவது 100 சதவீதம் வரை தமிழக அரசால் செலவிடப் பட்டுள்ளது. இதில், அதிக பட்சமாக மின்சாரத் துறைக்கு 2 ஆயிரத்து 751 கோடியும், போக்குவரத்துத் துறைக்கு 2 ஆயிரத்து 91 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு 8 ஆயிரத்து 70 கோடி ரூபாய் செலவிடப் பட்டது.கல்வித் துறைக்கு திட்டமிடப் பட்ட செலவு 936.81 கோடி; ஆனால், செலவிடப்பட்டதோ 837.11 கோடி ரூபாய் மட்டுமே என்றும் தெரிய வந்துள்ளது. கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்ததை விட ஏன் குறைவாக செலவிடப்பட்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை.
பொருளதார வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழகம் வெறும் 4.6 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது. கேரளா 7 சதவீதமும், ஆந்திரா 5.5 சதவீதமும், கர்நாடகா 5.1 சதவீதமும் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில் தென்மாநிலங்களிலேயே தமிழகம் தான் கடைசியில் உள்ளது.கடந்த நிதியாண்டில் இந்திய அளவில் விவசாயத்துறை தான் கேட்பாரற்று கிடக்கிறது என்றால் தமிழகத்திலும் அதே நிலை தான். விவசாயத் துறையில் வளர்ச்சி மைனஸ் 1.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. தொழில் வளர்ச்சியில் கடந்த 2006-07ம் ஆண்டில் 9.4 சதவீதம் வரை தமிழகம் இருந்தது. ஆனால், 2008-09ம் ஆண்டில் வெறும் 1 சதவீதம் மட்டுமே தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சேவைத் துறையில் கடந்த 2008-09ம் ஆண்டுகளில் 8.2 சதவீதம் வரை இருந்த வளர்ச்சி தற்போது குறைந்து 7.6 ஆக ஆகிவிட்டது. கடந்த ஆண்டு ஆய்வின்படி, தனிநபர் வருமானத்தைப் பொறுத்தமட்டில் தென்மாநிலங்களில் கேரளா 49 ஆயிரத்து 310, தமிழகம் 45 ஆயிரத்து 58, கர்நாடகா 40 ஆயிரத்து 998, ஆந்திரா 39 ஆயிரத்து 590 ரூபாய் என உள்ளதாக தெரிய வந்துள்ளது.
நித்தமும் உன் முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗
-
ஜல்லிக்கட்டு வரலாறு ஏறுதழுவுதல் பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் என் இனத்தின் அடையாளம். ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல...
-
மிக்க நலமுடைய நல் மரங்கள் பிறக்கும் மக்கள் குணம் தெரியாது ஆனால் மரங்களின் குணம் தெரியும் மரம் போல மனிதனை பெறுவதற்கு மனிதனை போல மர...


