Wednesday, March 31, 2010

சாப்பாடு இல்லாட்டி பரவா இல்லை, செந்தமிழ் மாநாடு இருக்கு ...

East OR west Tamilnadu is ...........?

வாழ்க தமிழ் : நம்மா அரசின் சாதனை இதே

கடந்த 2008-09ம் ஆண்டு கணக்கீட்டின்படி, தென்மாநிலங்களிலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் ஆகியுள்ளது. மேலும், தொழில் துறையில் ஒரே 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில்,என்ன வளர்ச்சி

அனைத்து மாநிலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக் கீட்டை மத்திய திட்டக்கமிஷன் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் நிதியை மாநில அரசுகள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளன; எந்தெந்த துறைகளில் என்னென்ன மாதிரியான வளர்ச்சியை இந்த நிதியின் மூலம் எட்டியுள்ளன என்பது குறித்தெல்லாம் மத்திய திட்டக்கமிஷன் ஆராய்வது வழக்கம்.கடந்த 2009-10ம் ஆண்டில் தமிழகத்துக்கு 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த நிதி முழுவதும் அதாவது 100 சதவீதம் வரை தமிழக அரசால் செலவிடப் பட்டுள்ளது. இதில், அதிக பட்சமாக மின்சாரத் துறைக்கு 2 ஆயிரத்து 751 கோடியும், போக்குவரத்துத் துறைக்கு 2 ஆயிரத்து 91 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு 8 ஆயிரத்து 70 கோடி ரூபாய் செலவிடப் பட்டது.கல்வித் துறைக்கு திட்டமிடப் பட்ட செலவு 936.81 கோடி; ஆனால், செலவிடப்பட்டதோ 837.11 கோடி ரூபாய் மட்டுமே என்றும் தெரிய வந்துள்ளது. கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்ததை விட ஏன் குறைவாக செலவிடப்பட்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை.

பொருளதார வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழகம் வெறும் 4.6 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது. கேரளா 7 சதவீதமும், ஆந்திரா 5.5 சதவீதமும், கர்நாடகா 5.1 சதவீதமும் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில் தென்மாநிலங்களிலேயே தமிழகம் தான் கடைசியில் உள்ளது.கடந்த நிதியாண்டில் இந்திய அளவில் விவசாயத்துறை தான் கேட்பாரற்று கிடக்கிறது என்றால் தமிழகத்திலும் அதே நிலை தான். விவசாயத் துறையில் வளர்ச்சி மைனஸ் 1.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. தொழில் வளர்ச்சியில் கடந்த 2006-07ம் ஆண்டில் 9.4 சதவீதம் வரை தமிழகம் இருந்தது. ஆனால், 2008-09ம் ஆண்டில் வெறும் 1 சதவீதம் மட்டுமே தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சேவைத் துறையில் கடந்த 2008-09ம் ஆண்டுகளில் 8.2 சதவீதம் வரை இருந்த வளர்ச்சி தற்போது குறைந்து 7.6 ஆக ஆகிவிட்டது. கடந்த ஆண்டு ஆய்வின்படி, தனிநபர் வருமானத்தைப் பொறுத்தமட்டில் தென்மாநிலங்களில் கேரளா 49 ஆயிரத்து 310, தமிழகம் 45 ஆயிரத்து 58, கர்நாடகா 40 ஆயிரத்து 998, ஆந்திரா 39 ஆயிரத்து 590 ரூபாய் என உள்ளதாக தெரிய வந்துள்ளது.


Tuesday, March 30, 2010

ம்ம்ம் அது ,,.... சின்ன கவுண்டரின் தீர்ப்பு


அரசியல்லுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகி விட்‌டேன். சினிமா செய்திகளைக் கூட பத்திரிகைகளில் படிப்பதில்லை என்று நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார். சமீப காலமாக சினிமா விழாக்களில் பங்‌கேற்பதை குறைத்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகாந்த் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் கோரிப்பாளையம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பொதுவாக சினிமா விழாக்களில் நான் பங்கேற்பதில்லை. அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா செய்திகளைக் கூட பத்திரிகைகளில் படிப்பதில்லை. யார் நடிக்கிறார்கள், யார் புதிய டெக்னீஷியன்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. இந்த கோரிப்பாளையம் படத்தை தயாரிக்கிற மைக்கேல் ராயப்பன் என் கட்சிக்காரர் என்பதால் வந்தேன், என்றார். இனி மேல் பாக் தீவரவாதி உடன் சண்டை போட யார் இருக்க ?

Monday, March 29, 2010

My Life and you


உயிர்ரைக் கொடுத்து உருவாக்கிய பெற்றோரை விட
உயர்ந்தவன் ஆகிறான் அவன் ................
இது தான் காதல்....

இப்படிக்கு என் தேவதை ,......................

Friday, March 26, 2010

Sweet Kiss


பல முறை படித்தும்
புரிந்து கொள்ள முடியாத
ஒரே கவிதை என்னவளுடைய
மௌனம் .....,,,

பல முறை சுவைத்தும் தீராத
சுவை உன் முத்தம் ......,,,,,
இப்படிக்கு என் தேவதை

என் தேவதையின் கவிதை , Sweet Heart


ஆயில் தண்டணை கூட சுகம்தான்
சிறை உன் இதயம் ஆக இருந்தால் ,.............................. இப்படிக்கு
என் தேவதை My Sweety.......,,,

Thursday, March 25, 2010

இந்தியா ஜனநாயகத்தின் விலை 3000 ரூபாய்


இந்தியா ஒளிர்கிறது

முன்பு தேர்தல் வந்தால் ஒரு பிரியாணி மற்றும் குவ்டார் இருந்தால் போதும், ஆனால் இன்று ரூபாய் 3000 தேவைபடுகிறது . இந்தியா வாழ்க



அவினாசி : ''ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார செல்வாக்கு காரணமாக பென்னாகரத்தில் தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை; வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தேர்தல் கமிஷனே ஒப்புக்கொண்டுள்ளதால், தாராளமாக தேர்தலை நிறுத்தி விடலாம்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூருக்கு நேற்று வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: பென்னாகரம் இடைத்தேர்தல் முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. திருமங்கலம் 'பார்முலாவை' தி.மு.க., அமல்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை தொகுதிக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர் என்ற புகாரும் வரத் துவங்கியுள்ளது. இதுதொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். ஆளுங்கட்சியினர், அதிகார துஷ்பிரயோகம், பண பலம் ஆகியவற்றை தொடர்ந்து விரிவுபடுத்தி செல்கின்றனர். நேற்று முன்தினம் வரை பென்னாகரம் வாக்காளரின் சந்தை மதிப்பு 3,000 ரூபாய்.(ரொம்ப அதிகம்மா )வாக்காளர்களின் உரிமை, மிக கேவலமாக விலை பேசப்படுகிறது.


'வாக்காளருக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை' என்று தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். தேர்தல் ஆணையத்தையும் மீறி தவறுகள் நடக்கின்றன. தவறு நடப்பது தெரிந்தும் கூட, 'தேர்தலை நடத்த வேண்டுமா' என்பதை ஆணையம் யோசிக்க வேண்டும். பா.ஜ.,வை பொறுத்தவரை, தேர்தலை நியாயமான முறையில் நடத்த முடியவில்லை என்றால், அதை ரத்து செய்வதில் தவறு ஏதுமில்லை என்றே கருதுகிறோம்.

போடுகம்மா வோட்டு க்வடார் பாட்டிலை பார்த்து .

Tuesday, March 23, 2010

என் தேவதையின் கவிதை My Angel Beautiful Lips


ஆத்திசூவடிகூட தெரியாதஎனக்கு
அகராதியின் ஆழத்தை உணர்த்தின
உன் கண்கள்
நிஎன்னைமரிக்க சொல்லிவிடு
ஆனால்மறக்க சொல்லிவிடாத.

உன்முத்தத்திற்கு காத்திருக்குது
என் உதடு உனக்கு திருப்பி தற.

: இப்படிக்கு என் தேவதை ,

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗