Saturday, January 16, 2021
Friday, January 15, 2021
ஜல்லிக்கட்டின் வரலாறு
ஜல்லிக்கட்டு வரலாறு
ஏறுதழுவுதல்
பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் என் இனத்தின் அடையாளம்.
ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு
கோனார்கள் எனப்படும் ஆயர்கள் (இடையர்) அதிகமாக வாழும் இடங்களில்
நடத்தப்படுகின்றது
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.
கோனார்கள் அதிகமாக வாழும் தென் தமிழகம் மற்றும் வட தமிழகங்களில் இன்றலவும் ஏறுதழுவுதல்(சல்லிக்கட்டு) நடைபெறுகின்றது.
சல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக
நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக
வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது
தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால்
காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர்
மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க
முயல்கிறார்கள்.
ஆனால் பண்டைய காலத்தில் ஆயர்களின் திருமணதில் கலந்த ஏறுதழுவுதல்
தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் ஒரே விதமாகவே நடந்துள்ளது. பண்டைய தமிழ்
நூல்கள் ஏறுதழுவலை ஒரே விதமாக தான் குறிப்பிடுகின்றன.
பெயர்க்காரணம்:
ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே.
முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு
செய்யும் முறையை கைவிட பெண்ணிற்க்காக காளையை அடக்கிய ஆயர் குல ஆடவர்கள்
சல்லிக்காசு காளை அடக்க ஆரம்பித்தனர்.
முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை ஏன் கைவிட்டார்கள் என ஆராயும்போது
- திருமணம் ஆன ஆண்கள் போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம்.
- வேறு சமுகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கோள்ளமுயற்ச்சி செய்திருக்கலாம்.
![]() |
| சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் |
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல்
நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற
சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப்
பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால்
‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி
தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம்
சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை
அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது
என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்
கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு
தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக
மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில்
பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும்
அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல்
பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.
அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும்
சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை) கவர்வதே
வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும்
காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலை கள்வர்களும் அரண்மனை
வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். முல்லை நிலத்தவரை தவிர வேறு எந்த நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் துப்பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது.
ஸ்பெயின்
உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன.
ஆனால் அவை விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்விய லின்
வெளிப்பாடாக விளங்கவில்லை. முற்காலத்தில் மாட்டின் கழுத்தில் புளியம்
விளாறை சுற்றியிருப்பார்கள். இதை சல்லி என்பர். பிற்காலத்தில் மாட்டின்
கொம்புகளில் பரிசுக்காக காசு களை கட்டியிருப்பர். இதை ஜல்லி என்பர்.
கழுத்தில் கட்டிய மணிகளை வைத்தோ, கொம்புகளில் கட்டிய பரிசுப்பணத்தை வைத்தோ
சல்லிக்கட்டு அல்லது ஜல்லிக்கட்டு என பிற்காலத்தில் பெயர் பெற்றாலும் ஏறு
தழுவுதல், மஞ்சு விரட்டு, எருதுப்பிடி போன்றவையே இந்த விளையாட்டின் முந்
தைய பெயர்கள்.
ஏறு தழுவுதல் வீறுடைய ஏறு முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார
மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும்
ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை
ஏறு என்றும், காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேர
நின்று தாகும்; வலிய கொம்புகளால் அதன் உடலைப் பீரிக் கொல்லும். இத்தன்மை
வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழ் நாட்டார்
போற்றுவர்.
மஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளை களைக் கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை;
அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள் என்பது அவர்க்குகந்த
வீர விளையாட்டு. அக் காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும்
ஆர்வத்தோடு நிற்பர். செல்வச் சிறுவர் உயர்ந்த பரண்களில் அமர்ந்திருப்பர்.
ஏறுகளுடன் போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞர்கள் ஆடையை இறுக்கிக் கட்டி
முறுக்காக நிற்பர். அப்போது முரசு அதிரும். பம்பை முழங்கும். கொழுமையுற்ற
காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும். களத்திலுள்ள கூட்டத்தைக்
கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை; கலைந்து பாயும் ஒரு காளை; தலை
நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை.
அவற்றின்மீது மண்டுவர் ஆயர்குல மைந்தர். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு
என்றறிந்து அதனையே குறிக்கொண்டு செல்வர். வசமாகப் பிடி கிடைத்தால் காளையின்
விசையடங்கும்; வீறு ஒடுங்கும்; ஏறு சோர்ந்து விழும்.
காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை, வாலைப் பிடித்தல் தாழ்மை
என்பது
தமிழர் கொள்கை. வாலைப் பிடித்தவன் காளையின் காலால் உதைபட்டு மண்ணிடை
வீழ்வான். ஆதலால் கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல்; தோல்வியின்
அறிகுறி. காளைப் போரில் வெற்றி பெற்ற இளைஞரை ஆயர் குலம் வியந்து நோக்கும்;
இள நங்கையர் கண்கள் நயந்து பார்க்கும்.
ஏறுடன் போராட முனைவோர் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. கொம்பை நாடிச் சென்ற
இடத்தில் தீங்கு விளைதலும் உண்டு. பிடி தப்பினால் அடிபட்டு விழுவர்.
எக்கசக்கமாய் அகப்படாமல் இடர்ப்படுவர்; காளையின் கொம்புகளால் குத்துண்டு
குடலறுந்து குருதி வடிப்பர். இங்ஙனம் ஈனமுற்ற இளைஞர் நிலை கண்டு ஆயர்
வருந்துவர்; ஆர்வமொழிகளால் அவர் துயரத்தை ஆற்றித் தேற்றுவர். வெற்றி பெற்ற
காளையும் வீழ்ந்த இளைஞரருகே வெம்மை நீத்து வாடி நிற்கும். பேராண்மையின்
அணியாகிய ஏறாண்மை கண்டு ஆயர்குல வீரர் அகங்களிப்பர்.
தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு
நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி
நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். வேறு சங்க
நூல்களில் காணப்பெறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே குறிப்பிடுகின்றது.
முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப்
பற்றிக் கூறுகின்றன.
முல்லை நிலத்தில் வாழ்ந்த செல்வப் பெருங்குடி மக்கள் தங்கள் மந்தையில்
காளைக் கன்று ஒன்றைத் தனியே வளர்ப்பார்கள். இதற்குத் தனியாக போர்ப் பயிற்சி
கொடுத்து ஏறுதழுவலுக்குப் பயன்படுத்துவார்கள். தங்களின் வீட்டில் வளரும்
மகளுக்கு பருவம் வந்தவூடன் காளையை அடக்கி வெற்றி கொள்ளும் காதலனுக்கு மணம்
முடித்து வைப்பார்கள். அன்றைய மகளிர் ‘கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகிறவனை மறுமையிலும் ஆயமகள் தழுவமாட்டாள், என்று சூளுரைத்திருக்கின்றனா;.
காதலும் வீரமும் தமிழா தம் இரு கண்களாக இணைந்து நிற்பன. இந்த இணைப்பை முல்லைக் கலியில் பெரிதும் காணலாம். “ஆயர்களின்
வீரத்தையூம் அஞ்சாமையையூம் எடுத்துக்காட்டும் ஏறுதழுவல் என்னும் முல்லை
நில வழக்கத்தை முல்லைக்கலி மட்டுமே விளக்கமாகக் கூறுகின்றது.
பிற சங்க நூல்கள் கூறவில்லை. ஆகவே கலித்தொகையில் முல்லைக்கலி புதுமையானது.
கிரேக்க நாட்டில் நடைபெற்ற வீர விளையாட்டுகளில் ஒன்றான பொன் நீர் நாய்ப்
போட்டியைப் பற்றிய பாடல்கள் ஏறுதழுவலைப் பாடும் முல்லைக் கலிப் பாடல்கள்
போன்றுள்ளன எனக் கருதப்படுகின்றது.”1
பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும்,
இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல்
பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.
பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில்
ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும்
(330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய
பல குறிப்புகள் உள்ளன.
முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை
ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின்
வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை, 'இனத்திற் றீர்ந்த
துளங்கிமி னல்லேறு மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை மாறா மைந்தின்
ஊறுபடத்தாக்கிக் கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங்
குறிஞ்சியுங் குழைய நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335) என
மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.
'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை'
என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.
வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை
அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச்
சிலப்பதிகாரம்,
'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக் முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8) என்று குறிப்பிடும்.
கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம்,
மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல்,
பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள்,
பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ்
ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம்
பெற்றிருக்கவேண்டும்.
பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட
மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத்
தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின்
கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத்
தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன
மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர். ஏறு
தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும்,
ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித்
தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின்
மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு.
அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின்
மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி
முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது. பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில்
(பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு
அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண்
யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல
பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான். ஒரு
காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி
வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை
மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல்
இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக்
கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித்
தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல்
இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற
வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்பதை,
'ஓஓ! இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,
திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட் டவள்.2'
என்னும் வரிகள் விளக்குகின்றன. பசுத்திரளை உடைய ஆயர் மகனுக்கு தலைவியை மணம்
முடிக்க பெற்றோர் எண்ணினர். தான் விரும்பிய தலைவனோ செங்காhpக்
கொம்பிடையில் புகுந்து தழுவி வெற்றி கொண்டுவிட்டான். தலைவியின் மணம்
உறுதியாகிவிட்டதை,
'இன்று எவன், என்னை எமர் கொடுப்பது-அன்று, அவன்
மிக்குத்தன் மேற்சென்ற செங்காரிக் கோட்டிடைப்
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு!.3 '
என்ற பாடல் வரிகள் உணா;த்துகின்றன. ‘ஏறுகொள்ள வல்லார் என்னைப் போன்றவர்
எவரும் இலர் என வீரம் பேசும் பொதுவன் தலைவிக்கு ஒருநாள் உறவினன் ஆகாமற்
போவதில்லை. அத்தலைவனைக் கண்டு கண்களும் காதற் பயிhpனை வளர்க்கிறதாம்
தலைவிக்கு. இதை,
‘கோளாளா என்ஒப்பார் இல்’ என நம்மானுள்,
தாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒருநாள்,
கோளாளன் ஆகாமை இல்லை; அவற்கண்டு
வேளாண்மை செய்தன கண்இ4
என்னும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.
மெல்லிணா;க் கொன்றையூம், மென்மலர்க் காயாவூம்,
புல்லிலை வெட்சியூம், பிடவூம், தளவூம்,
குல்லையூம், குருந்தும், கோடலும், பாங்கரும்-
கல்லவூம், கடத்தவூம்- கமழ் கண்ணி மலைந்தனர்.5
இவ்வாறு பல மலர்களைச் சூடி ஆயா; இளைஞர்கள் விரைந்து வந்து ஏறு தழுவூதலைக்
காண விரும்பிய ஆயமகளிர் பலரும் பரண்களில் முற்படவே வந்து அமர்ந்தனர்.
'முல்லை முகையூம் முருந்தும் நிறைத்தன்ன
பல்லா, பெருமழைக் கண்ணா, மடம் சேர்ந்த
சொல்லா, சுடரும் கனங்குழைக் காதினர்.6'
இவ்வாறு ஆய மகளிரும் ஏறுதழுவலைக் காண ஆர்வம் காட்டியூள்ளனர். ஏறுதழுவி
வென்ற வீரனையே மணக்கவூம் விரும்பினர்.கெல்லேற்றுக்கு அஞ்சுகின்றவனை ஆயமகள்
தழுவ விரும்பவில்லை உயிருக்குப் பயந்து ஏறுதழுவாதிருக்கும் ஆயர் இளைஞரை
யாரும் விரும்புவதில்லை. தாம் காதலிக்கும் பெண்ணின் முலையிடை போலக் கருதி,
ஆர்வமுடன் வீழ்ந்து தழுவி வெற்றியடைபவர்களையே பெற்றோர் தம் மகளுக்கு
ஏற்றவனகாக் கருதுவார்கள் என்பதை,
"கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர் துறந்து-
நைவாரா ஆயமகள் தோள்,
வளியா அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்-
கொலையேற்றுக் கோட்டிடைத், தாம்வீழ்வர் மார்பின்
முல்லையிடைப் போலப், புகின்.
ஆங்கு: குரவை தழீ, யாம், மரபுளி பாடி, 7"
என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.
என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.
வீரத்தை கூட்டும் குரவை கூத்து
அக்காலத்தில் ஏறு தழுவும் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் மாலையிலோ, பிந்தைய
நாள் மாலையிலோ குரவை கூத்து நடக்கும். இதில் ஆயர் குல ஆண்களும், பெண்களும்
இணைந்து ஆடுவர். ஆயர் கன்னியர் பாடும் பாடல் ஏறு தழுவப்போகும் தன் காதலனை
உசுப்புவது போலவோ, ஏறு த ழுவி வென்றவனை புகழ்வது போலவோ அமைந்திருக்கும்.
புலிக்குளம் காளை
புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஜல்லிகட்டுக்கு
என்று பிரத்தேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம் . இது காங்கேயம்
காளைகளை விட மிகவும் ஆக்ரோசமானது. புலிக்குளம் காளைகளை பாரம்பரிய கால்நடை
வளர்பாளர்களான கோனார்களே (ஆயர்) வளர்த்து வருகின்றனர். உலகளவில் இந்திய
நாட்டின பசுக்களின் பாலே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக
அறியப்பட்டுள்ளது. அதிலும் புலிக்குளம் இன பசுக்களின் பாலே சிறந்தது என்று
விஞ்ஞானிகளால் நிருபிக்கப்பட்டுள்ளது
கோட்பாடு:
- காளைக்கொம்புக்கு அஞ்சுபவனை ஆயர்குலப் பெண் தழுவமாட்டாள்.
- ஆயர் மணப்பெண்ணுக்கு விலை வேண்டார்
- அடக்கியவனுக்குப் பெண்ணைக் கொடுப்பர்
செய்திகள்:
- ஏறு கொள்ளும் விழா நடைபெறும் இடத்தின் பெயர் தொழூஉ (தொழுவம்).
- இந்தப் பாணிவிழா நடக்கப்போவதை முதல்நாளே பறை அறைந்து அறிவிப்பர்.
- ஏறு தழுவப்போகும் ஏந்தல் தன் சுற்றத்தாருக்குச் சொல்லி அனுப்புவான்
- ஏறு தழுவுவதற்கு முதல்நாள் இரவு மகளிரும் மைந்தரும் சேர்ந்து குரவை ஆடுவர்
- கோளாளர் என் ஒப்பார் இல் – எனப் பொதுவன் வஞ்சினம் கூறுதல் உண்டு.
- புண்பட்ட அனைவரையும் புணர்குறி செய்து அழைத்துக்கொண்டு பொதுமகளிர் பொழிலுக்குச் செல்வர்.
- புண்பட்டவனை எல்லாரும் போற்றிப் பாடுவர்
பழக்கம்:
- பிடவம், கோடல், காயா, வெட்சி, தளவம், குல்லை, குருந்து, முதலான மலர்க்கண்ணி சூடிக்கொண்டு ஏறுகோள் முரண்தலையில் ஈடுபடுவர்.
- காளைகளுக்கு உரிய மகளிர் காளைகளோடு அணிவகுத்து நிற்பர்
- இந்தக் காளையை அடக்குபவனுக்கு இவள் உரியள் என்பர்
- துறை (இந்திரன்), ஆலம் (சிவன்). மராஅம் (முருகன்) ஆகியவற்றைத் தொழுதபின் தொழுவுக்குச் செல்வர்
காளைகள்:
- சிவன் கணிச்சி போல் காளைகளின் கொம்பு சீவி விடப்படும்
- வெண்கால்-காரி, புள்ளி-வெள்ளை, சேய் (செவலைக்காளை), குரால் (செம்புள்ளிக்காளை) முதலான காளைகள் பாடலில் குறிப்பிடப்படுகின்றன
உவமைகள்:
- போரில் காயம் பட்டு வீழ்ந்தவனைப் போரிடுவதற்கு ‘ஒவ்வான்’ என விட்டுச் செல்லும் மறவன் போல ஒரு காளை கீழே விழுந்தவனை விட்டுச் சென்றது.
- ஒரு காளை பொதுவனைக் கொம்பால் குத்தி உழலைமரம் போலச் சுழற்றியது
- பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றியவன் நெஞ்சைப் பிளப்பதுபோல் ஒரு காளை நெஞ்சில் குத்தித் தூக்கியது
- ஏறுகோள் காட்சி ஒன்று நூற்றுவரை அடக்கிய களம் போல இருந்தது
- புலியும் களிறும் போரிடுவது போல் பொதுவர் காளையைத் தழுவினர்
- அந்திக் கடவுள் எருமையை இடந்து கூளிப் பசியைத் தீர்ப்பவன் போல ஒரு காளை குத்தியது.
- இருளில் வந்து தந்தையைக் கொன்றவனைப் போல ஒரு காளை குத்தியது.
- சிவன் கணிச்சியில் தொங்கும் மாலை போல ஒரு காளை ஒருவன் குடலை மாட்டித் தூக்கியது.
- பட்டம் விடுபவன் நூலைச் சுற்றுவது போலக் குடல் சரிந்தவன் தன் குடலை வயிற்றுக்குள் சுருட்டிக்கொண்டான்.
- கூந்தல்-குதிரையை அடக்கியவன் போல ஒருவன் காளையை அடக்கினான்.
- வெள்ளைக்காளையை அடக்குபவன் பாம்பு கௌவிய நிலாவை விடுவிக்கும் சிவன் போல் காணப்பட்டான்
காளை நிறத்துக்கு உவமைகள்:
- கரிநெற்றிக் காரி – திருமால் வாயில் சங்கு போன்ற நிறம்
- செம்மறி வெள்ளை – வெண்ணிறப் பலராமன் மார்பில் ஆரம் போன்ற நிறம்
- குரால் – கணிச்சியோன் மணிமிடறு போன்ற நிறம்
- புகர் – இந்திரன் கண்கள் போல் புள்ளிகள்
- சேய் – சேயோன் போன்ற நிறம்
அடக்கிய முறை
கொம்பைப் பிடித்து அழுத்தல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையில் மார்பில்
தொங்கல், கழுத்தைத் திருகல், இமிழ் என்னும் கொட்டேறியைத் தழுவல், தோளில்
ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை அடக்கப் பொதுவர் கையாண்ட
உத்திகள்.
Wednesday, April 12, 2017
Monday, January 13, 2014
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு
முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும்
கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி
மகிழ்கிறோம்.
பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல், பொங்குதல் என்பது பொருள். அதாவது
புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து
பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும்,
வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும்
ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும்
அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும்,
தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையும்.
பொங்கல் தினத்தன்று வயல்களில் விளைந்து, அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவைக் கொண்டு வந்து வீட்டில் படைத்து வணங்குவதும் வாடிக்கையாக உள்ளது. தவிர, காடுகளில் விளையக்கூடிய அனைத்து வகை காய்கறிகளையும், பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் படைத்து வழிபடுகிறார்கள்.
அறுவடை தொடங்கியதைக் குறிக்கும் வகையில், பயிர் விளைச்சலுக்கு உதவிய மழை, சூரியன், கால்நடைகள் மற்றும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யும் நாளே தைப் பொங்கல் திருநாள்.
தைப் பொங்கல் ஒரு நாளுடன் தொடங்கி முடிவதில்லை. பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பே, வீட்டில் உள்ள பழைய பொருட்கள், வேண்டாத பண்டங்களை அகற்றி, வீட்டை லட்சுமிகரமாக்க வேண்டும். தைப் பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகையினை பழையன கழிதலும் புதியன புகுதலுமானக் கொள்வர். இதன் பின்னரே தை மாதம் முதல் நாளாகப் பொங்கல் தினத்தை ஆரம்ப அதிர்ஷ்ட நாளாகக் கொள்வது சந்தோஷகரமான மன நிறைவு அன்றோ!
மனித வாழ்விற்குத் தூய்மை மிகவும் அவசியமானது. அகம், புறம் சுத்தமாக அமைந்தால் மட்டுமே தனி மனித வாழ்வு சுபிட்சம் நிறைந்ததாகக் கொள்ளப்படும்.
போகிப் பண்டிகையில் புறச் சூழல் தூய்மையாகின்றது. பொங்கல் திருநாளிலோ நம்மை என்றும் காக்கும் இறைவனுக்கும், ஞாயிறுக்கும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. தித்திக்கும் பொங்கல் படைக்கப்படுகின்றன.
ஒளிக் கடவுளை, இருள் அகற்றும் ஜோதிப் பிழம்பான சூரியனை நாம் வணங்குகிறோம். “குற்றம் இல்லாத விரிந்த மலர்ச் சுடரே, ஒளி வடிவானவனே, இனிமை நிறைந்த அமுதமே, மும்மலப்பற்றை அறுத்து என்னை வளர்க்கும் மேலோ” என சிவனை இறைஞ்சுகின்றார் மாணிக்கவாசகர்.
தைத்திருநாளை இறை ஒளியை அவன் திவ்ய நற்கருணையில் வியந்து போற்றுவோம். என்றும் ஒளி பெருகட்டும்.
பொங்கல் தினத்தன்று வயல்களில் விளைந்து, அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவைக் கொண்டு வந்து வீட்டில் படைத்து வணங்குவதும் வாடிக்கையாக உள்ளது. தவிர, காடுகளில் விளையக்கூடிய அனைத்து வகை காய்கறிகளையும், பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் படைத்து வழிபடுகிறார்கள்.
அறுவடை தொடங்கியதைக் குறிக்கும் வகையில், பயிர் விளைச்சலுக்கு உதவிய மழை, சூரியன், கால்நடைகள் மற்றும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யும் நாளே தைப் பொங்கல் திருநாள்.
தைப் பொங்கல் ஒரு நாளுடன் தொடங்கி முடிவதில்லை. பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பே, வீட்டில் உள்ள பழைய பொருட்கள், வேண்டாத பண்டங்களை அகற்றி, வீட்டை லட்சுமிகரமாக்க வேண்டும். தைப் பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகையினை பழையன கழிதலும் புதியன புகுதலுமானக் கொள்வர். இதன் பின்னரே தை மாதம் முதல் நாளாகப் பொங்கல் தினத்தை ஆரம்ப அதிர்ஷ்ட நாளாகக் கொள்வது சந்தோஷகரமான மன நிறைவு அன்றோ!
மனித வாழ்விற்குத் தூய்மை மிகவும் அவசியமானது. அகம், புறம் சுத்தமாக அமைந்தால் மட்டுமே தனி மனித வாழ்வு சுபிட்சம் நிறைந்ததாகக் கொள்ளப்படும்.
போகிப் பண்டிகையில் புறச் சூழல் தூய்மையாகின்றது. பொங்கல் திருநாளிலோ நம்மை என்றும் காக்கும் இறைவனுக்கும், ஞாயிறுக்கும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. தித்திக்கும் பொங்கல் படைக்கப்படுகின்றன.
ஒளிக் கடவுளை, இருள் அகற்றும் ஜோதிப் பிழம்பான சூரியனை நாம் வணங்குகிறோம். “குற்றம் இல்லாத விரிந்த மலர்ச் சுடரே, ஒளி வடிவானவனே, இனிமை நிறைந்த அமுதமே, மும்மலப்பற்றை அறுத்து என்னை வளர்க்கும் மேலோ” என சிவனை இறைஞ்சுகின்றார் மாணிக்கவாசகர்.
தைத்திருநாளை இறை ஒளியை அவன் திவ்ய நற்கருணையில் வியந்து போற்றுவோம். என்றும் ஒளி பெருகட்டும்.
Sunday, January 12, 2014
போகி பண்டிகை
போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்.
போகி அன்று வாசலில் காப்புக்கட்டுவார்கள். உப்பு சேர்க்காமல் மொச்சை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு வேகவைத்து சங்கராந்தி கடவுளுக்கு படைப்பார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் சங்கராந்தி கடவுள் வரும் என்பது நம்பிக்கை. சங்கராந்தி கடவுள் வரும் விதத்தை பொருத்து நன்மை ஏற்படும் என்பார்கள். தீமை ஏதும் ஏற்படும் என்றால் எல்லா வீடுகளிலும் பரிகாரம் செய்வார்கள்.
தைப்பொங்கல்
தைப்பொங்கல்
விழா தமிழர்களின் திருநாள். உழவர்களின் இன்பம் பொங்கும் பெருநாள்.
பூமியில் இயற்கை வளங்களை நிலைக்கச் செய்து உயிரினங்களை வாழவைக்கும்
சூரியபகவானுக்கு தமிழர்கள் நன்றி செலுத்தும் இனிய நன்நாள். இப் பொங்கல் விழா இவ்வருடம் 14.01.2014 செவ்வாய் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.
ஏழு வர்ணக் குதிரைகளில் ஏறி உயர்வு தாழ்வு பாராது, நாம் உயிர் வாழ சக்தியையும், ஒளியையும் தரும் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் உன்னதநாள். நன்றி செலுத்துதல், விருந்தோம்பல் என்பன ஆதி முதல் தமிழர்களினால் பேணிக்காத்துவரும் பண்பாடுகளில் தலை சிறந்து விளங்குபவைகளாகும். அதனால் போலும் சுமார் 2042 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகை "என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் (ஆனால்) உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என சிறு எச்சரிக்கையோடு வெளிப்படுத்திச் சென்றுள்ளார்.
ஆதி காலத்திலிருந்து சூரியபகவானை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வரும்/வழிபட்டு வந்த இவ் உலகம் அவரின் தோற்றம் பற்றி அறியாதிருந்தமையால்; அவர் எம்மை ஆவலுடன் நேசிக்க சுற்றுலா ஆரம்பிக்கும், (வடக்குத் திசை நோக்கிய பயணத்தை) ஒவ்வொரு புதிய சுற்றையும் அவரின் ஜனன நாளாக (பிறந்தநாளாக) கொண்டாடுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். சூரியனில் ஏற்படும் ஒவ்வொரு சிறு நிகழ்வும் பூமியில் வாழும் எம்மை பெரிதாக பாதிக்கின்றன. சூரியன் வாழும் வரைதான் பூமி நிலைத்திருக்கும் என்பதும் விஞ்ஞானிகளின் முடிபு. சூரியன் பூமியைச் சுற்ற (பூமி, சூரியனை மேற்கு கிழக்காக சுற்றுவதுதான் இயற்கையின் நியைதி, ஆனால் பூமியில் இருப்போருக்கு சூரியன் கிழக்கு மேற்காக பூமியைச் சுற்றுவதாக தோன்றும்) ஆரம்பிக்கும் இந் நன்நாளில் நாம் எல்லோரும் சூரியபகவானைச் தரிசித்து அவரின் அருட்பெரும் கொடைக்கு நன்றி செலுத்தி அவரை வாழ்த்தி பிறக்கப் போகும் புதிய சுற்றில் மேலும் பல நன்மைகள் பெற அவரின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும் விழாவாக தைப்பொங்கல் விழா அமைகின்றது.
ஆதவனின் சக்தியாகிய வெப்பம் மற்றும் வெளிச்சத்தின் சக்தியைக் கொண்டுதான், இப்புவியில் மரம், செடி, கொடி, புல் பூண்டு மற்றும் மிருகம், பறவை இன்னும் புழு- பூச்சி இனங்கள்… ஏன் மனித குலம் வரை அனைத்துமே தோன்றி வளர்ந்து, இப்புவியைத் தழைக்கச் செய்கின்றன. சூரியன் ஒருநாள் ஒளிர மறுத்துவிட்டால், இப் பூவுகமே இருண்டுபோய்விடும். சூரியன் தானாக ஒளிரும் ஒரு நட்சத்திரமாக இருப்பதனால் அதன் ஒளிராத உபகிரகங்கள் அதன் ஒளியைப்பெற்று பிரகாசிக்கின்றன. சூரியன் ஒளிர மறுத்துவிட்டால் இரவில்கூட எமக்கு ஒளிதரும் சந்திரன், வெள்ளி போன்ற கிரகங்களை நாம் காணவே முடியாது போவிடும்.
மேலும், சூரியனின் பேருதவியின்றி எந்த ஓர் உயிரினமும் பூமியில் தனது உணவைப் பெற்றுவிட முடியாது. அதுமட்டும் அன்றி, புவியின் அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கும் ஒவ்வாதவற்றை அழித்து, அவற்றின் சுகாதாரமான நலவாழ்வை உறுதி செய்வதும் சூரியனே! இயற்கைப் படைப்புகளின் இயக்கத்திற்கும், அழகின் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கும் மூலாதாரக் காவலனாக விளங்குவதும் சூரியன்தான். உலகின் தொன்மைப் படைப்பான வேதங்களில், “சூரியனின் பெருமைகள்" கூறப்பட்டுள்ளன.
சூரிய பகவான் ஆன்மாவை பிரதிபலிப்பவன். ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும். சூரியனை வணங்கி ஆதித்திய ஷிருதய மந்திரத்தால் இராமன் இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றான். வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரீ. காயத்ரீ மந்திரத்துக்கு உரியவன் சூரியன். சூரியநமஸ்காரம் என்ற ஓரு விசேஷமான வழிபாடு முறை உண்டு. இதை செய்வதில் ஆன்மீக பலமும், சரிர பலமும் அடையமுடியும் என்பது அனுபவம் கண்ட உண்மை. சுயநிலை, சுய-உயர்வு, செல்வாக்கு, கௌரவம், ஆற்றல், வீரம், பராகிரமம், சரிர சுகம், நன்நடத்தை நேத்திரம், உஷ்ணம், ஓளி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரன் சூரியன். சூரியன் அக்கினியை அதிதேவதையாக கொண்டவன். கதிரவன், ரவி, பகலவன் என பல பெயர்களால் அழைக்கப்படுபவன். சூரியன் தகப்பனை குறிக்கும் கிரகமாகவும், உத்திரம், உத்திரட்டாதி, கார்திகை நட்சத்திரக்கு உரியவனாகவும். சிம்மம் இராசிக்கு சொந்தக்காரனாகவும். உச்ச வீடாக மேஷத்தையும், நீச்ச வீடாக துலா இராசிகளையும் உடையவனாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
இலங்கையில் சூரிய வழிபாடு, மார்கழி முடிந்து தை பிறக்கின்ற நன்னாளில், தைப்பொங்கல் விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இதுவே “பொங்கல் திருநாள்’ ஆகும். இந்தக் காலகட்டத்தில் சூரியன், தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குவதால், அந்தத் தினம் மிகவும் புனிதமானதாகும். சூரியனின் அந்தப் பயணம்தான் பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ள நமது நாட்டிற்கு கோடையின் தொடக்கமாகும். கோடைக்காலம் தரும் சூரியனின் வட திசைப் பயணம், அதாவது உத்தராயணம், தேவர்களின் பகல் பொழுது. அதன் தொடக்கம், இந்த “மகர சங்கரமணம்’ என்பதால், புலரும் சூரியனை அன்று வணங்குவது மிகவும் பொருத்தமானது; புண்ணியம் தரக் கூடியது.
தமிழர்கள் வாழும் நாடுகளில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது. பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது. அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம். இதனால்தான் பொங்கல் பண்டிகையை “உழவர் திருநாள்’ என கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்து, அதில் புத்தரிசியும் புதுவெல்லமும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம். அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம். வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் ஆதவனுக்கு நிவேதனம் செய்து, அகம் மகிழ்கின்றோம்.
பொங்கல் தினத்துக்கு முன் தினம், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும், மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் இந்தியாவில் கொண்டாடப்படுகின்றன.
இலங்கையில் மட்டுமல்லாது, உலகின் பல பகுதிகளிலுமே சூரிய வழிபாடு ஏதாவது ஒரு வகையில் இருந்து வருகிறது. கிரேக்க நாட்டினர் சூரியனை, “இவ்வுலகைப் படைத்தவர்’ எனக்கருதி வழிபடுகின்றனர். மெக்சிகோ வாசிகளும் அப்படியே! அவர்களின் திருமணச் சடங்குகளில் சூரிய ஆராதனை, முக்கிய இடம் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல… கிரேக்கர்கள் நம் பாரத தேசத்தவர் போலவே ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிளம்பி வந்து, இரவில் திரும்பிச் செல்பவர் சூரியன் என்று கூறி, அவரை ஆராதிக்கின்றனர்.
வேறு சில வெளி நாட்டினர், சூரியனுக்குத் தேக ஆரோக்கியத்துடன் நெருக்கமான தொடர்பு இருப்பதை உணர்ந்து, “சூரிய உபாசனை செய்தால் கொடிய நோய்கள் தீரும்’ என்ற நம்பிக்கையோடு வழிபடுகின்றனர்.
பண்டைய எகிப்தில் பல சூரியக் கோயில்கள் இருந்துள்ளன. சூரிய வழிபாடு மட்டுமல்லாமல், அங்கு நட்சத்திர ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இங்கிலாந்தின் பூர்வ குடிகள், திறந்த வெளியில் சூரிய பூஜையை நடத்தினர். வேறு சில நாடுகளில் சூரியச் சிலைகள் அரசனின் உருவத்தில் அமைக்கப்பட்டன. அவற்றுக்குத் தலைக் கவசம், உடற் கவசம் மற்றும் காலணிகள் இருந்தன. நேபாளத்தில் இன்றும் சூரியக் கோயில்கள் உள்ளன. அங்கு முறைப்படி சூரிய வழிபாடு நடைபெறுகிறது.
இவ்விதம், பண்டைக்காலம் தொட்டே உலகின் பல்வேறு நாடுகளில், சூரிய வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.
எனவே நாமும் பொங்கல் திருநாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம். இது தமிழர் திருநாள்! ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் மகிழ்ச்சியொளி வீச, சூரிய பகவான் திருவருள் பொழிவார்.
“எல்லோருக்கும் சூரியபகவானின் நல்லருள் கிடைக்க எம் வாழ்த்துக்கள்”
சூரிய பகவான் பற்றிய புராணக் கதை:
இந்த உலகில் ஒளிப்பெறச் செய்யும் கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான். இவருக்கு சுவர்க்கலா தேவி(உஷாதேவி), சாயாதேவி என்ற இரு மனைவிகள். அவர்களுள், சுவர்கலா தேவிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். மகன்களுக்கு வைவஸ்தமனு, இயம தர்மராசன் என்றும், மகளுக்கு யமுனை என்றும் பெயர் சூட்டினர்.
சூரியனுடன் சுவர்க்கலா தேவி இல்லறம் இனிது நடத்தினாலும் அவளுக்கு சூரியனுடன் தொடர்ந்து இல்லறம் நடத்த போதிய சக்தி இல்லை. அவளுக்கு சக்தி குறைந்துகொண்டே வந்தது. இதனால் அவள் தவம் செய்ய யோக கானகம் புறப்பட்டாள்.
சுவர்க்கலா தேவி தவம் செய்ய புறப்படுமுன்; தனிடம் இருந்த சிவசக்தியினால், தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க, தன் நிழலையே தன்னை போன்ற ஒரு பெண்ணாக மாற்றி, அதற்கு "சாயாதேவி" என்று பெயர் சூட்டினாள்.
தான் இழந்த சக்தியை பெற தவம் மேற்கொள்ள தயாரான அவள், சாயாதேவியிடம், "நீ என்னை போன்றே சூரியனுக்கு மனைவியாக இருந்து என் முன்று குழந்தைகளையும் கண்போல் வளர்த்து வர வேண்டும்" என்று கூறினாள்.
அவளது வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி, "சூரியனுக்கு மனைவியாக தங்கள் சொற்படியே நடக்கின்றேன். ஆனால் சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை தவிர வேறு வழியில்லை" என்று கூறினாள். அதற்கு சுவர்க்கலா தேவி உடன்பட்டாள்.
தொடர்ந்து, அவள் தன்னை யார் என்று அறியாத வண்ணம் குதிரை வடிவம் கொண்டு தவம் செய்ய தொடங்கினாள். அதேநேரத்தில் சாயா தேவி, சுவர்க்கலா தேவி போன்று சூரியனுடன் இல்லறம் நடத்த தொடங்கினாள்.
அப்போது சூரியனுக்கு சாயாதேவி முலமாக மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் கிருதத்வாசி, கிருதவர்மா ஆகிய இரண்டு மகன்களும், தபதி என்ற மகளும் ஆவார்கள். இதில் கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வர பகவானாக மாறினார். அவரது சகோதரி தபதி, நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.
சனி பகவான் கருமை நிறம் கொண்டவர். அவரது செயல்கள் எல்லாம் சூரியனுக்கு எதிராக இருந்ததால் இருவருக்கும் பகை உணர்வு ஏற்பட்டது. சனி பகவானுக்கு சர்வேஸ்வரரான சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி இருந்தது. தான் ஒரு சர்வேஸ்வர நிலையை அடைய வேண்டும் என்று தாயாரிடம் அனுமதி பெற்று காசிக்கு சென்றார் சனி பகவான்.
அவர் காசியில் லிங்கம் ஒன்றை எழுந்தருளச் செய்து பல ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவரது பக்தியை கண்டு மெய்சிலிர்த்து போன சிவபெருமான் பார்வதி சமேத ராக காட்சி அளித்தார்.
அப்போது சிவபெருமான் சனிபக வானை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு சனி பகவான், "எனக்கு என் தந்தையை விட அதிக பலத்தையும், பார்வையையும் தர வேண்டும்" என்றார்.
மேலும், "உடன் பிறந்தவர்கள் உயர்நிலைக்கு சென்றுவிட்டனர். நான் அவர்களை விட பராக்கிரமசாலியாகவும், பலசாலியாகவும் ஆக வேண்டும்" என்றும், "இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு அருள வேண்டும்" என்றும் வரம் கேட்டார் சனிபகவான். அவரது வேண்டுகோளை ஏற்ற ஈஸ்வரன், அவருக்கு "சனீஸ்வரர்" என்ற பெயர் விளங்க அருள் பாலித்தார்.
பெயர் பெற்று விட்டால் மட்டும் போதுமா?
நவக்கிரகங்களில் தான் மட்டுமே அதிக பலத்துடன் இருக்க வேண்டும் என்றும், அத்துடன் தன் பார்வை பட்டால் மற்றவர்கள் எல்லா பலமும் இழந்து விடவேண்டும் என்றும் ஈசனிடம் வரம் கேட்டார் சனி பகவான்.
சிவபெருமான், சனிபகவானின் இந்த வேண்டுகோளையும் ஏற்று, நவக்கிரகங்களில் அதிக பலத்தையும், விண்ணுலகம், மண்ணுலகம் அனைத்தையும் அவரது ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சிபுரியும் பெருமைக்கு உரிய கடவுளாக்கினார்.
Thursday, January 9, 2014
Subscribe to:
Posts (Atom)
நித்தமும் உன் முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗
-
ஜல்லிக்கட்டு வரலாறு ஏறுதழுவுதல் பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் என் இனத்தின் அடையாளம். ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல...
-
மிக்க நலமுடைய நல் மரங்கள் பிறக்கும் மக்கள் குணம் தெரியாது ஆனால் மரங்களின் குணம் தெரியும் மரம் போல மனிதனை பெறுவதற்கு மனிதனை போல மர...





